'பொன்னியின் செல்வன்' வசூலை தொட்ட தளபதி விஜயின் ‘லியோ’.. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொடுத்த தகவல் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ உள்ளே..

லியோ படத்தின் முந்தைய வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் Producer dhananjayan about Leo Movie Business market | Galatta

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் அட்டகாசமான ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் தொடங்கி பின் இந்த ஆண்டு காஷ்மீரில் கடும் குளிரில் தொடங்கப்பட்டு முடித்துள்ளனர் படக்குழு பின் சிறு இடைவெளிக்கு பின்  தற்போது லியோ திரைப்படம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக சமீபத்தில் படத்தின் நாயகி திரிஷா பதிவிட்ட பதிவு ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டது குரிப்பிடதக்கது.  கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி உலகமெங்கும் பிரம்மாண்ட அளவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனன்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் வருகை குறித்து அவரிடம் கேட்கையில் அவர்,

“விஜய் சார் பெரிய மாஸ்டர் அவர் என்னிக்கும் அவர் பன்ற எல்லா விஷயமும் லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசிப்பார்கள். இப்போ 24 நேரத்திற்குள்ள 5 மில்லியன் பாலோவர்ஸ் வரதுலாம் ஜோக் கிடையாது.  5 மில்லியன் கணக்கு திறந்து பின் தொட முடியாது. ஏற்கனவே இருக்கும் 5 மில்லியன் கணக்கு பின் தொடர்வதுதான் இது பிண்ணனி. அத்தனை பேர் பின்தொடர வேண்டுமென்றால் அவர் நிச்சயம் அவ்ளோ பெரிய நடிகரா இருக்க வேண்டும். இதுவரை யாரும் பண்ணாத சாதனை அது. பார்க்கும் போதே பிரம்மிப்பாக இருக்கிறது. இது நிச்சயம் உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய சாதனையா இருக்கும்" என்றார்

இதையடுத்து லியோ படத்தின் வசூல் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை,

“லியோ திரைப்படம் பிரம்மாண்டமான தரத்தில் வந்து கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தினம் தினம் ஏறிக்கொண்டே இருக்கின்றது. உலகளவில் இந்த படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத அளவு இருக்கிறது.  அதாவது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி செய்த வசூலை லியோ படம் வெளியாவதற்கு முன்பே வியாபரம் செய்து விற்கிறார்கள். நிச்சயமா அந்த குழுவை பாராட்ட வேண்டும். மக்கள் மத்தியில் லியோ படத்தை பேச வெச்சு அந்த படத்துடைய வர்த்த ரீதியான வியாபாரத்தை உயர்த்தி இன்று பெரிய அளவு ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கு.." என்றார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் பத்து தல, சூர்யா 42, தங்கலான் ஆகிய திரைப்படங்கள் குறித்து பல அட்டகாசமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

சார்பட்டா பரம்பரை 2 வில் சந்தோஷ் நாராயணன் இருக்கிறாரா?.. - பா ரஞ்சித் கொடுத்த பதில்.. முழு விவரம் உள்ளே..
சினிமா

சார்பட்டா பரம்பரை 2 வில் சந்தோஷ் நாராயணன் இருக்கிறாரா?.. - பா ரஞ்சித் கொடுத்த பதில்.. முழு விவரம் உள்ளே..

பா ரஞ்சித், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - அட்டகாசமான அப்டேட்.. விவரம் இதோ..
சினிமா

பா ரஞ்சித், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - அட்டகாசமான அப்டேட்.. விவரம் இதோ..

“விடுதலை படத்தின் வரவேற்பிற்கு முழு காரணம் இவர்தான்..” வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு..
சினிமா

“விடுதலை படத்தின் வரவேற்பிற்கு முழு காரணம் இவர்தான்..” வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு..