“படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – விடுதலை சிறப்பு நேர்காணல் இதோ..

விடுதலை படம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்ட ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் விவரம் இதோ - Viduthalai cinematographer about train accident scene | Galatta

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் ‘விடுதலை’ இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ம் தேதி உலகமெங்கும்  வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில் பட்டதில் அதிகம் பேசப்பட்ட ரயில் விபத்து காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் தற்போது பரவலாக பேசப்பட்டும் வருகிறது. இதுகுறித்து நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் விடுதலை பட ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் விடுதலை படம் குறித்தும் மற்றும் ரயில் விபத்து காட்சி படமாக்கம் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். அதில். "அந்த காட்சி எடுக்கும் போது முதல் நாள் பயிற்சி இருக்கும் னு நினைச்சோம். பின் கார்ல இருந்து கிளம்பி பாதி தூரம் வரை முதல் நாள் பயிற்சி இருந்தது. இப்படி தான் கொஞ்சம் கொஞ்சம் நாளா பயிற்சி மட்டும் தான் பண்ணிட்டு இருந்தோம்.. 6 வது நாள் தான் அந்த காட்சியவே படமா எடுத்திருப்போம். இரண்டு இரயில் பெட்டியை விலைக்கு வாங்கிட்டாங்க.. மத்ததெல்லாம் ஜாக்கி சார் ரெடி செஞ்சார். ரயில் பெட்டிய செஞ்சிட்டு அதை சாய்க்கனும் அதுக்கு மட்டுமே 3 நாட்கள் தேவைப்பட்டது.  முதல்ல படத்துல ரயில் விபத்தையே காட்றதா இருந்தோம். அப்பறம் அது மாத்திட்டோம்." என்றார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து அவர் பேசுகையில், "அவர் படப்பிடிப்பு பாம்பு போனாலும் அப்டியே விட்ருங்க னு சொல்வார். ஒரு மரம் காட்சி வைக்க இடையூறா இருந்தது னு வெட்டலாம் னு நினைச்சோம். அவர் அனுமதிக்க மாட்டார். ஒரு செடிய கூட ஒடிக்க விடமாட்டார். தேவையில்லாத செடி னு சொன்னா.. 'தேவையில்லாத செடி னு எப்படி சொல்வீங்க.. உங்களுக்கு தேவையில்லாம இருக்கலாம் இந்த காட்டுக்கு தேவையில்லாத செடி கிடையாது ல' னு அப்படி கேட்பார்." என்றார் வேல்ராஜ்

அதனை தொடர்ந்து ஒளிப்பதிவு குழு குறித்து ஒளிபதிவாளர் வேல்ராஜ் பேசுகையில், "ஒளிப்பதிவு குழு இல்லனா எதுவும் சாத்தியமில்லை. படம் ஆரம்பிக்கும் போது 13 பேர் இருந்தாங்க. இறுதியில் 4 பேர் தான் இருந்தாங்க.. எல்லோரும் ஓடிட்டாங்க..  ஏன்னா அந்த பகுதியில் அட்டை கடிக்கும், உன்னி கடிக்கும்.. அதெல்லாம் கடிச்சா 3 மாசம் வரைக்கும் தழும்பு போகாது. இரவு பகல் வேலை பார்க்கனும்.." என்றார்.

மேலும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜ் அவர்கள் விடுதலை திரைப்படம் குறித்தும் வெற்றிமாறன் அவர்களின் அடுத்த திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு நேர்காணலை காண...

“விடுதலை படத்தின் வரவேற்பிற்கு முழு காரணம் இவர்தான்..” வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு..
சினிமா

“விடுதலை படத்தின் வரவேற்பிற்கு முழு காரணம் இவர்தான்..” வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு..

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூர்யா 42... அட்டகாசமான  அப்டேட்டை வெளியிட்ட படக்குழு –விவரம் இதோ..
சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூர்யா 42... அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு –விவரம் இதோ..

“வெற்றிமாறன் ரொம்ப தெளிவு.. வாடிவாசல் இப்படி தான் இருக்கும்” கலை இயக்குனர் ஜாக்கி.. – அட்டகாசமான தகவல்களுடன் முழு வீடியோ இதோ..
சினிமா

“வெற்றிமாறன் ரொம்ப தெளிவு.. வாடிவாசல் இப்படி தான் இருக்கும்” கலை இயக்குனர் ஜாக்கி.. – அட்டகாசமான தகவல்களுடன் முழு வீடியோ இதோ..