தனது முதல் திரைப்படமான கோமாளி திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கனதன். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக வெளிவந்த கோமாளி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக அவதாரம் எடுத்த திரைப்படம் லவ் டுடே. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லவ் டுடே திரைப்படத்தில் தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முன்னதாக வெளியான லவ் டுடே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சற்று முன்பு லவ் டுடே திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. பக்கா என்டர்ட்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ட்ரைலர் இதோ…