பிரபுதேவா,தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தேவி.ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு படமாக்கி வருகின்றனர்.

Prabhudeva Tamanna Starrer Devi 2 Release Date Officially Revealed by the Producer

இந்த படத்திலும் பிரபுதேவா,தமன்னா,RJ பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர்.நேற்று LKG பட வெற்றி விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தனது அடுத்த ரிலீஸ் தேவி 2 தான் என்று தெரிவித்தார்.

Prabhudeva Tamanna Starrer Devi 2 Release Date Officially Revealed by the Producer

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.இதையடுத்து இந்த படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.