ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தற்போது சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது.பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை மதுரை சம்பவம்,தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரிகுமார் இயக்குகிறார்.

Prabhudeva Starrer Theal Release Date Revealed Directed by Harikumar Produced by Studio Green

கடந்த வருட இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.வாட்ச்மேன் படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சி சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பிரவீன் கே.எல். இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

Prabhudeva Starrer Theal Release Date Revealed Directed by Harikumar Produced by Studio Green

தற்போது இந்த படத்தை ஜூன் 14ஆம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் நமபதக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhudeva Starrer Theal Release Date Revealed Directed by Harikumar Produced by Studio Green