"பாக்ஸ் ஆபிஸ் புல்டோசர்!"- ரிலீசுக்கு முன்பே ஆல் டைம் ரெகார்ட் படைத்த பிரபாஸின் சலார்... வேற லெவல் மாஸ் அறிவிப்பு இதோ!

ரிலீசுக்கு முன்பே ஆல் டைம் ரெகார்ட் படைத்த பிரபாஸின் சலார் படம்,prabhas in salaar movie made all time record release in usa | Galatta

கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சலார் திரைப்படம் இதுவரை வெளிவந்த இந்திய திரைப்படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் எந்த திரைப்படமும் படைத்தராத புதிய ஆல் டைம் ரெக்கார்ட் சாதனையை ரிலீசுக்கு முன்பே படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் என அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் பிரபாஸின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. அந்த வகையில் ஆதிபுரூஷ் திரைப்படமாவது பெரும் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த நிலையில் வசூல் ரீதியில் வரவேற்பு இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் படம் இல்லாததால் கடந்த ஜூன் மாதம் ரிலீசான ஆதிபுரூஷ் படமும் ஏமாற்றத்தையே கொடுத்தது.  

இந்த நிலையில் ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் சலார். கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி, சப்தகிரி ஆகியோர் சலார் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த 2023 ஆம் ஆண்டு வருட செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலார் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மட்டும் இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு மிக பிரம்மாண்ட ரிலீஸாக பிரபாஸின் சலார் திரைப்படம் 1979 இடங்களுக்கும் மேலான இடங்களில் ரிலீஸாக இருப்பதாக ப்ரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸின் சலார் பட அதிரடியான அந்த அறிவிப்பை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

A grand salute from our side to the 𝘽𝙤𝙭 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚 𝘽𝙪𝙡𝙡𝙙𝙤𝙯𝙚𝙧…. Marking the Man’s birthday year with the locations we are releasing in North America.

PRABHAS 🔥🔥🔥💥💥

1979 Locations - ALL TIME RECORD RELEASE FOR ANY INDIAN FILM. #Salaar 💥 #SalaarCeaseFirepic.twitter.com/ynw3jZOirR

— Prathyangira Cinemas (@PrathyangiraUS) July 17, 2023

சினிமா

"டைகர் கா ஹுக்கும்"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட 2வது பாடல்... மரண மாஸ் வீடியோ இதோ!

சினிமா

"சம்பவம் இருக்கு!"- தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர் பட டீசர் குறித்த HINT கொடுத்த ஜீவி பிரகாஷ்? அதிரடி அப்டேட் இதோ

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!