விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

விஷால் - ஹரியின் விஷால்34 படத்தில் பிரியா பவானி சங்கர்,priya bhavani shankar joins as female lead in vishal 34 movie | Galatta

விஷால் - இயக்குனர் ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக தயாராகும் விஷால் 34 திரைப்படத்தின் கதாநாயகி குறித்து அறிவிப்பு வெளியானது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் விஷால். அந்த வகையில் காவல்துறை அதிகாரியாக விஷாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லத்தி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுக்கும் நடிகர் விஷால் க்ரைம் த்ரில்லர் படமான துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படம் உருவாகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான டைம் டிராவல் கதைக்களத்தை கொண்ட சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் இரட்டை வேடங்களில் மார்க் மற்றும் ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மிரட்டலான முன்னணி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன், சுனில், ரித்து வர்மா, அபிநயா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக மார்க் ஆண்டனி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே தனது அடுத்த அதிரடி திரைப்படமாக தன் திரைப்படம் ஆக விஷால் நடிக்கும் திரைப்படம் தான் விஷால் 34. தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் பக்கா என்டர்டெய்னர் படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் இயக்குனர் ஹரி, விஷால்34 படத்தை இயக்குகிறார். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய வெற்றி படங்களை திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஷால் - இயக்குனர் ஹரி இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் படப்பூஜை நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் விஷால் 34 திரைப்படத்தை அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர். M.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையில் உருவாகும் அதிரடி படமான விஷால் 34 படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.  கடந்த ஜூலை 15ஆம் தேதி 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விஷால் 34 திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - புலி இயக்குனர் சிம்பு தேவனின் புது படத்தில் கைகோர்த்த யோகி பாபு... கவனம் ஈர்க்கும் டைட்டில் அறிவிப்பு வீடியோ!
சினிமா

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - புலி இயக்குனர் சிம்பு தேவனின் புது படத்தில் கைகோர்த்த யோகி பாபு... கவனம் ஈர்க்கும் டைட்டில் அறிவிப்பு வீடியோ!

விஷால் - SJசூர்யாவின் மாஸ் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி பட வெயிட்டான ட்ரீட்… அட்டகாசமான அதிருதா பாடல் இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் மாஸ் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி பட வெயிட்டான ட்ரீட்… அட்டகாசமான அதிருதா பாடல் இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ACTION PACKED துருவ நட்சத்திரம்... ஆவலோடு எதிர்பார்த்த 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ACTION PACKED துருவ நட்சத்திரம்... ஆவலோடு எதிர்பார்த்த 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!