"சம்பவம் இருக்கு!"- தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர் பட டீசர் குறித்த HINT கொடுத்த ஜீவி பிரகாஷ்? அதிரடி அப்டேட் இதோ

தனுஷின் கேப்டன் மில்லர் பட டீசர் குறித்த HINT கொடுத்த ஜீவி பிரகாஷ்,gv prakash hints on dhanush in captain miller teaser | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவை கொண்டாடும் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் கோலிவுட் பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த வாத்தி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது திரை பயணத்தில் 50வது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைகிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் இந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது TWITTER பக்கத்தில் ஜூலை 28க்கு சம்பவம் இருக்கு கில்லர் கில்லர் என தற்போது பதிவிட்டிருப்பதால் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த HINT கொடுத்திருப்பதாக தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். ஜீவி பிரகாஷின் அந்த பதிவு இதோ…
 

July 28 sambavam irukku … killer killer 🔥🔥🔥

— G.V.Prakash Kumar (@gvprakash) July 17, 2023

சினிமா

"செட்கள் எல்லாம் கலைக்கப்படவுள்ளன"- தளபதி விஜயின் லியோ பட கலை இயக்குனர் சதீஷ்குமாரின் எமோஷனலான பதிவு இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி காம்போவின் துருவ நட்சத்திரம் பட புது சர்ப்ரைஸ்... அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி காம்போவின் துருவ நட்சத்திரம் பட புது சர்ப்ரைஸ்... அசத்தலான GLIMPSE இதோ!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - புலி இயக்குனர் சிம்பு தேவனின் புது படத்தில் கைகோர்த்த யோகி பாபு... கவனம் ஈர்க்கும் டைட்டில் அறிவிப்பு வீடியோ!
சினிமா

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - புலி இயக்குனர் சிம்பு தேவனின் புது படத்தில் கைகோர்த்த யோகி பாபு... கவனம் ஈர்க்கும் டைட்டில் அறிவிப்பு வீடியோ!