"புயலுக்கு முன் வரும் இடி!"- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மிரட்டலான லுக்... ஷாரூக் கான் வெளியிட்ட ஜவான் பட அசத்தலான GLIMPSE!

ஷாரூக் கான் வெளியிட்ட ஜவான் பட நயன்தாராவின் புது போஸ்டர்,shah rukh khan shared new poster of nayanthara from jawan | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்திலிருந்து நடிகை நயன்தாராவின் புதிய போஸ்டர் ஒன்றை ஷாருக் கான் வெளியிட்டு இருக்கிறார். பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். 

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லராக PREVUE வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஜவான் திரைப்படத்தின் அதிரடியான PREVUE வீடியோ மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லீயின் வழக்கமான மாஸ் விஷயங்கள் எல்லாம் சேர்ந்த பக்கா ஆக்சன் பேக்கேஜாக ஜவான் திரைப்படம் இருக்கும் என்பது இந்த PREVUE வீடியோவில் தெரிவதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். செம்ம மாஸாக இருக்கும் ஷாருக்கான் மட்டுமல்லாது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோரும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் மேல் தனது இசையால் இன்னும் மாஸ் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். 

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்திலிருந்து தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. துப்பாக்கி ஏந்தியபடி மிரட்டலான லூக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கும் இந்த புதிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை வெளியிட்ட ஷாருக் கான், "புயலுக்கு முன் வரும் இடி இவள்!" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். ஜவான் படத்திலிருந்து வெளியான நயன்தாராவின் மிரட்டலான அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

She is the thunder that comes before the storm! #Nayanthara#JawanPrevue Out Now! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/STn6a20kka

— Shah Rukh Khan (@iamsrk) July 17, 2023

சினிமா

"சம்பவம் இருக்கு!"- தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர் பட டீசர் குறித்த HINT கொடுத்த ஜீவி பிரகாஷ்? அதிரடி அப்டேட் இதோ

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

சினிமா

"செட்கள் எல்லாம் கலைக்கப்படவுள்ளன"- தளபதி விஜயின் லியோ பட கலை இயக்குனர் சதீஷ்குமாரின் எமோஷனலான பதிவு இதோ!