"குமரேசன் ரெடி!"- வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 பட ஷூட்டிங் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த சூரி... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ!

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 பட சூப்பர் அப்டேட் கொடுத்த சூரி,soori shared shoot update of viduthalai part 2 movie vetrimaaran | Galatta

இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் விடுதலை பாகம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகர் சூரி பகிர்ந்து கொண்டார். ஒட்டு மொத்த இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்து வரும் ஆகச்சிறந்த இயக்குனராகவும் திகழ்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அந்த வகையில் அடுத்த சிறந்த படைப்பாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அனிமேட்ரானிக்ஸ் முறையில் பிரத்யேகமாக "ரோபோ" காளை ஒன்றை வாடிவாசல் படத்திற்காக பட குழுவினர் உருவாக்கி வருகின்றனர். வெகு விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து தளபதி விஜய் உடன் ஒரு புதிய படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இணைய இருக்கிறார். அதற்கு முன்பாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.இது எல்லாவற்றுக்கும் முன்பாக தனது விடுதலை பாகம் 2 திரைப்படத்தை தற்போது இயக்குனர் வெற்றிமாறன் கையில் எடுத்திருக்கிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகிய திரைப்படம் விடுதலை. RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் ரிலீசான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் காட்சியான அந்த ரயில் விபத்து காட்சி ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆரம்பத்திலேயே பிரமிக்க வைத்தது. அந்தப் பிரம்மிப்பும் தாக்கமும் படத்தின் இறுதிவரை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரியும், பெருமாள் வாத்தியார் எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகராக இத்தனை நாட்கள் நம்மை மகிழ்வித்து வந்த நடிகர் சூரி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சேர்ந்த நடிகராக அசத்தியிருக்கிறார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை பாகம் 1 திரைப்படத்தை தொடர்ந்து விடுதலை பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் தற்போது விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி அறிவித்திருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் தனது குமரேசன் கதாபாத்திரத்திற்கு தயாராகும் விடுதலை பாகம் 2 படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

குமரேசன் ரெடி!#ViduthalaiPart2 Shooting In Progress #vetrimaaran @rsinfotainment pic.twitter.com/aW7fzaOG77

— Actor Soori (@sooriofficial) July 17, 2023

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

விஷால் ஹரி கூட்டணியின் புது அதிரடி பட கதாநாயகி இவர்தான்... விஷால் 34 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

சினிமா

"செட்கள் எல்லாம் கலைக்கப்படவுள்ளன"- தளபதி விஜயின் லியோ பட கலை இயக்குனர் சதீஷ்குமாரின் எமோஷனலான பதிவு இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி காம்போவின் துருவ நட்சத்திரம் பட புது சர்ப்ரைஸ்... அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி காம்போவின் துருவ நட்சத்திரம் பட புது சர்ப்ரைஸ்... அசத்தலான GLIMPSE இதோ!