லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் நேற்று வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. 3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டு வெளியான இப்படம் இரண்டாம் நாளான இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் குறித்து பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தங்களது ட்விட்டரில், எங்கள் பாக்ஸ் ஆஃபீஸை ஆளும் ராஜாவாக திகழ்கிறார் சிட்டி என்று பதிவிட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இனி வரும் கட்சிகளும் ஹவுஸ்-ஃபுல் என தெரிவித்திருக்கின்றனர்.