தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழும் தளபதி விஜய்  அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65”  என பெயரிடப்பட்டுள்ளது.தளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தை தயாரித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் தளபதியுடன் இணைந்துள்ளது. 

தமிழில் நயன்தாரா நடித்து வெளியான “கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும்”டாக்டர்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

தளபதி 65 திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நகைச்சுவையிலும் கலக்கிய நடிகர் யோகிபாபு தற்போது தளபதி 65 படத்திலும் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து டுவிட்டரில் யோகி பாபு தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு சர்கார், பிகில் என தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தையும் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 40 திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.