தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரம்மி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். நடிகர் தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக தென்னிந்தியாவில் அறியப்பட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, நடிகர் விக்ரமுடன் சாமி 2, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, நடிகர் தனுஷுடன் வடசென்னை என நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார். 

அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளிவர இருக்கும் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாளத்தில் சூப்பர் ஹிட் படங்களான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளும் பல உடற்பயிற்சிகளில் ஒன்றாக குத்துச்சண்டை பயிற்சியை ஐஸ்வர்யா ராஜேஷ் மேற்கொண்டு வருகிறார்.மிகவும் தீவிரமாக ஐஸ்வர்யா ராஜேஷ் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.