தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .குற்றம் 23,செக்க சிவந்த வானம் என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

Popular Kannada Actress Joins The Cast of Arun Vijay Sports Drama Boxer

இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தற்போது பாக்ஸர் ,அக்னி சிறகுகள்,சாஹோ என்று செம பிஸியாக இருக்கிறார்.

Popular Kannada Actress Joins The Cast of Arun Vijay Sports Drama Boxer

அருண் விஜய் ஹீரோவாக நடித்து ,விவேக் இயக்கும் Boxer படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக இறுதிசுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Popular Kannada Actress Joins The Cast of Arun Vijay Sports Drama Boxer

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகையுமான சஞ்சனா கல்ராணி நடிக்கவுள்ளார்.இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Kannada Actress Joins The Cast of Arun Vijay Sports Drama Boxer