நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை டாப்ஸி , தமிழில் நடிகர் ஜீவா நடித்த வந்தான் வென்றான் அஜித் குமார் நடித்த ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர் நடித்த GAME OVER திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

பாலிவுட்டிலும் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை டாப்ஸி . இந்திய திரை உலகின் மூத்த முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து இவர் நடித்த PINK திரைப்படம் இந்திய அளவில் டாப்ஸியை பிரபலப்படுத்தியது. அதை தொடர்ந்து இவர் நடித்த தி காசி அட்டாக், மிஷன் மங்கள், தப்பட் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட்டானது. 

தற்போது நடிகை டாப்ஸி நடித்த ஹஸீன் தில்ரூபா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இயக்குனர் விணில் மேத்யூ இயக்கும் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தில் நடிகை டாப்ஸி உடன் இணைந்து விக்ரான்ட் மாஸே  ஹர்ஷவர்தன் ரானே நடித்துள்ளனர் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஆனந்த் எல் ராய் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தின் டீசர் & ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 2ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் ஹஸீன் தில்ரூபா திரைப்படம் வெளியாக உள்ளது.