தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தல அஜித்.தற்போது தல 59 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார்.கடின உழைப்பால் உயர்ந்த இவரருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.தான் அரசியலில் எந்த விதத்திலும் ஈடுபடப்போவதில்லை என்று சில மாதங்களுங்கு முன் அறிக்கை வெளியிட்டார்.

Popular Director Suseenthiran Requests Thala Ajith To Enter Politics in Twitter

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல உதவிகளை செய்து வந்த இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது.தற்போது வெண்ணிலா கபடி குழு,பாண்டியநாடு படங்களின் இயக்குனர் சுசீந்திரன் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Popular Director Suseenthiran Requests Thala Ajith To Enter Politics in Twitter

அதில் நீங்க வாங்க தலைவா மக்கள் பணியாற்ற இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதோடு உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்துள்ளார்.இதற்கு சில அஜித் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வந்தாலும் பலர் அஜித் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.

Popular Director Suseenthiran Requests Thala Ajith To Enter Politics in Twitter

இதனை தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் அரசியல் வேண்டாம் அஜித் போதும் என்ற பேரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.இதற்கு தல அஜித்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.