இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது. 

ஆனால்  மிக மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் போனது. இதனால் சிலம்பரசனின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். எதிர்பார்த்த ஒரு வெற்றியை பெற முடியாமல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராக களம் இறங்க தொடங்கினார். முன்னதாக அருள்நிதி நடித்த K-13 திரைப்படத்திலும்  அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 

மேலும் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் நடித்த தபாங் 3 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் வசனங்களை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பகீரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.பகீரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரைலர் மற்றும் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில்  பகீரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அதில் இயக்குனராக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பருமனாக இருந்த உடல் தோற்றத்தை முழுவதும் மாற்றி எடையை குறைத்து தற்போது மிக அழகான ஒரு தோற்றத்தில் மாறுவதற்கான  காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். மனச்சோர்வில் இருந்து வெளிவந்து தன்னம்பிக்கையோடு  முன்னேறுவது மட்டுமே வெற்றிக்கான சாவி என  பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த ஊக்கமளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.