தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Popular Bollywood Actor Opens Up on Acting in Thalapathy 63 and Sharing ScreenSpace With Vijay

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Popular Bollywood Actor Opens Up on Acting in Thalapathy 63 and Sharing ScreenSpace With Vijay

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி shroff நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதையடுத்து சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் விஜயுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அவர் என் Kudrat ka Kanoon பட இயக்குனரின் மகன் ,அவர் தந்தையையும் விஜயையும் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Popular Bollywood Actor Opens Up on Acting in Thalapathy 63 and Sharing ScreenSpace With Vijay

விஜய் ஒரு மாபெரும் நடிகர் மற்றும் நல்ல மனிதர் என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.அதோடு அட்லீ ஒரு சிறந்த இயக்குனர்,என்னை ஒரு குழந்தையை போல படக்குழுவினர் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular Bollywood Actor Opens Up on Acting in Thalapathy 63 and Sharing ScreenSpace With Vijay

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஜாக்கி Shroff தளபதி விஜயை புகழ்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆனந்தத்தில் உள்ளனர். 

Popular Bollywood Actor Opens Up on Acting in Thalapathy 63 and Sharing ScreenSpace With Vijay