தமிழ் சினிமாவில் சேது,பிதாமகன் போன்ற தரமான படைப்புக்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா.கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான நாச்சியார் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து இவர் இயக்கிய வர்மா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இவர் என்ன படம் எடுக்க போகிறார் என்று தமிழ் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது.

Popular Bigboss Star to Act as Heroine in Director Bala Arya Atharvaa New Project

இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் அடுத்ததாக ஆர்யா மற்றும் அதர்வா இருவரையும் ஹீரோவாக வைத்து இயக்கவுள்ளார் என்ற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Popular Bigboss Star to Act as Heroine in Director Bala Arya Atharvaa New Project

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Bigboss Star to Act as Heroine in Director Bala Arya Atharvaa New Project