சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனன்யா மணி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வந்தாள் ஸ்ரீதேவி.2018 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரின் ஹீரோயினாக அனன்யா மணி நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அனன்யா மணி.இந்த சீரியலை அடுத்து இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அடுத்தாக மியூசிக் வீடியோ,ஆல்பம் பாடல்,திரைப்படம் என்று நடித்து வருகிறார் அனன்யா மணி.நட்டி நடிப்பில் உருவாகி வரும் வெப் என்ற படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார் அனன்யா மணி.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனன்யா அவ்வப்போது தனது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.

இவருக்கு டிசம்பர் 10ஆம் தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.