தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை ரசிகர்களும்,திரைத்துறையில் உள்ளவர்களும் பட்டம் கொடுத்து கௌரவிப்பர்.அப்படி பட்டம் வைத்து கொண்ட பல நடிகர்,நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Actress Varalakshmi Sarathkumar Named Makkal Selvi in Her Upcoming Movie Danny

அப்படி தல,தளபதி,சூப்பர்ஸ்டார்,லேடி சூப்பர்ஸ்டார்,புன்னகை அரசி இவர்களை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி உருவாகியுள்ளார்.மக்கள் செல்வன் என்பது விஜய் சேதுபதி என்று அனைவரும் அறிந்ததே.இவருக்கு இந்த பட்டத்தை கொடுத்தது இவரின் இயக்குனர் சீனு ராமசாமி.

Popular Actress Varalakshmi Sarathkumar Named Makkal Selvi in Her Upcoming Movie Danny

இன்று வரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் FirstLook மற்றும் Title வெளியிடப்பட்டது.Danny என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் மக்கள் செல்வி வரலக்ஷ்மி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் இயக்குனர் வரலக்ஷ்மிக்கு இந்த பட்டத்தை வழங்கியுள்ளார்.

Popular Actress Varalakshmi Sarathkumar Named Makkal Selvi in Her Upcoming Movie Danny

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் செல்வி வரலக்ஷ்மி சரத்குமார் மேலும் பல வெற்றி படங்களில் நடித்து பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று கலாட்டா நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Popular Actress Varalakshmi Sarathkumar Named Makkal Selvi in Her Upcoming Movie Danny