தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் மஹேந்திர சிங் என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகர் ஈஸ்வர். அவர் விஜய் டிவியில் ராஜா ராணி, கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அதிக சீரியல்களில் நடித்து வரும் ரசிகர்களின் ஃபேவரைட் என்றே கூறலாம். 

இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வர் தனது நண்பர்கள் உடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் கையில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவர் கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என ஈஸ்வர் தெரிவித்து உள்ளார். 

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். இனி வரும் ஷூட்டிங்கில் பாதுகாப்பாக இருங்கள் என்று கமெண்ட்டில் ஆறுதல் கூறி வருகின்றனர் ரசிகர்கள். 

இது ஒருபுறம் இருக்க தற்போது தான் மீண்டும் சன் டிவி சீரியல் ஒன்றில் வில்லனாக நடிக்க தொடங்கி இருப்பதாக ஈஸ்வர் தெரிவித்து உள்ளார். தனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக இயக்குனர் மற்றும் சன் டிவிகு நன்றி கூறி உள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ɪꜱᴠᴀʀ (@tv_actor_isvar_official)