பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பூஜா ஹெக்டே !
By Aravind Selvam | Galatta | December 10, 2021 16:32 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ளதாக தகவல்கள் கிடைத்து வருகிறது.தற்போது இந்த படத்தில் தனது ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.மேலும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM