பீஸ்ட் குறித்து பூஜா ஹெக்டே பகிர்ந்த ருசிகர தகவல் !
By Aravind Selvam | Galatta | March 14, 2022 17:42 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.
சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் நெல்சன்,அனிருத்,சிவகார்த்திகேயனுடன் போனில் விஜய் பேசுவது ப்ரோமோ வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது.இந்த பாடல் அடுத்து வெளியாகி இணையத்தில் சென்சேஷனல் ஹிட் அடித்து வருகிறது.பல சாதனைகளை இந்த பாடல் முறியடித்துள்ளது.
150 மில்லியனை தாண்டி இந்த பாடல் சென்று வருகிறது.இந்த படத்தின் அடுத்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.தற்போது ராதே ஷ்யாம் பட ப்ரோமோஷனில் பீஸ்ட் குறித்த கேள்விக்கு பதிலளித்த பூஜா ஹெக்டே இது நெல்சன் மற்றும் தளபதி விஜய் இருவரின் உலகங்கள் இணையும் ஒரு படமாக இருக்கும் இருவரின் ஸ்டைலும் இந்த படத்தில் இருக்கும் , விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.