அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்

அஜித் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்,Popular tamil producer ss chakravarthy passed away | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தனது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த ராசி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள் இதுவரை 14 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதில் 9 திரைப்படங்கள் அஜித் குமார் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் குமாரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள் அஜித் குமாரின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படங்களாகவும் திருப்புமுனையாகவும் அமைந்த திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ராசி படத்தில் தொடங்கி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து பெரும் வெற்றி பெற்ற வாலி, VZ.துரை இயக்கத்தில் அஜித் குமார் நடித்து ஹிட்டடித்த முகவரி, இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் அட்டகாசமான பல கெட்டப்புகளில் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சிட்டிசன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் அஜித்குமார் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட்டான வில்லன், மற்றும் அதே இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் இயக்கத்தில் மூன்று வேடங்களில் அஜித் குமார் நடித்து மெகா ஹிட்டான வரலாறு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள், ரெட், ஆஞ்சநேயா, ஜி உள்ளிட்ட திரைப்படங்களையும் சேர்த்து 9 படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் சீயான் விக்ரமின் காதல் சடுகுடு, சிலம்பரசனின் காளை & வாலு மற்றும் ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களையும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது புதிய பரிமாணத்தை தொடங்கிய எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள் கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விலங்கு வெப் சீரீஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி திடீரென காலமானார். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்குள்ளான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவர்கள் அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார். இவரது மறைவுக்கு முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமமும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி
புற்றுநோயால் காலமானார்.#SSChakravarthy #RIPChakravarthy #Galatta pic.twitter.com/doRTn42rlE

— Galatta Media (@galattadotcom) April 29, 2023

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைப்பர் கண்ணாடியின் ரகசியத்தை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைப்பர் கண்ணாடியின் ரகசியத்தை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2 பட அமர்க்களமான ஆரம்பம்... லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிரடியாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட அமர்க்களமான ஆரம்பம்... லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிரடியாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் இதோ!

அருள்மொழி வர்மனின் மாஸ் என்ட்ரி... பொன்னியின் செல்வன் 2 FDFS பார்க்க குடும்பத்தோடு வந்த ஜெயம் ரவி! வைரல் வீடியோ
சினிமா

அருள்மொழி வர்மனின் மாஸ் என்ட்ரி... பொன்னியின் செல்வன் 2 FDFS பார்க்க குடும்பத்தோடு வந்த ஜெயம் ரவி! வைரல் வீடியோ