பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு... "குந்தவை" திரிஷாவின் இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான வீடியோ இதோ!

பொன்னியன் செல்வன் 2 முதல் பாடல் அறிவிப்போடு வந்த புது வீடியோ,ponniyin selvan 2 first single announcement trisha as kundavai making video | Galatta

பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பொன்னியின் செல்வன்.  புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியாத சமயத்தில் பலமுறை முயற்சி செய்த இயக்குனர் மணிரத்னம் விடாமுயற்சியின் பலனாக தனது கடின உழைப்பில் பொன்னியின் செல்வனை திரை வடிவமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒலிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் பலம் கூட்டினார். பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், முதல் பாடல் மிக விரைவில் வெளிவர இருப்பதாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா, குந்தவை கதாபாத்திரத்திற்கு தயாராகும் அட்டகாசமான மேக்கிங் வீடியோவையும் பட்டக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான இந்த மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Sharp tongue. Fierce mind.
Powerhouse!
Have you missed our eternal beauty?
Watch what went on BTS as @trishtrashers became #Kundavai!

First Single Coming Soon!
Stay tuned 🥳#PS #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/mHnRJze9dv

— Madras Talkies (@MadrasTalkies_) March 9, 2023

சினிமா

"கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே OK சொன்னேன்!"- லோகேஷ் கனகராஜ் உடன் முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த சார்லி! வீடியோ உள்ளே

சினிமா

"இளைய நிலா பொழிகிறதே" பாடலின் கிட்டாரிஸ்ட்டாக மனம் கவர்ந்த பிரபல இசை கலைஞர் திடீரென காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே
சினிமா

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே