"FUN ரோலர் கோஸ்டர் ரைட் ஆரம்பம்!"- விஜயின் தளபதி 68 படத்தை தொடங்கிய வெங்கட் பிரபு... ரசிகர்கள் எதிர்பார்த்த வேற லெவல் அறிவிப்பு இதோ!

விஜயின் தளபதி 68 படத்தை தொடங்கிய வெங்கட் பிரபு,Venkat prabhu thalapathy vijay in thalapathy68 movie started | Galatta

தளபதி விஜயின் 68 வது திரைப்படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்தை தொடங்கி இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருக்கிறார். பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக தொடர்ந்து அட்டகாசமான படங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த அதிரடி படைப்பாக ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது லியோ திரைப்படம். மாஸ்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் திரைபயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான ரிலீசாக லியோ படத்தை வெளியிடப்பட குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்சமயம் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட மிரட்டலான VFX காட்சிகளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

லியோ திரைப்படத்தை தொடர்ந்து திரை பயணத்தில் 68 வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் . முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. தனக்கென தனி பாணியில் பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக காணப்படுகிறது. உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் தளபதி விஜயுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் மீனாட்சி சௌத்ரி, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது தளபதி 68 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில், “ஆரம்பமானது தளபதி 68.. உங்கள் அனைவரது அன்பு மற்றும் வாழ்த்துக்களோடு… இது ஒரு FUN ரோலர் கோஸ்டர் ரைடாக இருக்கப் போகிறது. எல்லா புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகள் நம்ம லியோ ரிலீஸுக்கு பிறகு வரும். இறைவன் மிகவும் அன்பானவன்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். எனவே அவர் அறிவித்தபடி இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டு இருக்கும் அந்த பதிவு இதோ…
 

And it began!! #Thalapathy68 with all ur love and wishes!!! This is gonna be a fun roller coaster ride!! And all pics and updates after namma #Leo release!! 🙏🏽🙏🏽🙏🏽 God is Kind❤️ pic.twitter.com/0G8Zrty2vy

— venkat prabhu (@vp_offl) October 2, 2023