தளபதி விஜயின் லியோ பட மிரட்டலான ட்ரெய்லர் ON THE WAY... ரிலீஸ் தேதி அறிவிப்புடன் வந்த அதிரடியான போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு,thalapathy vijay in leo movie trailer release date announcement | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாக்கியிருக்கும் படம் தான் லியோ. விக்ரம் படத்தின் இமாலய வெற்றி, 100 சதவிகித லோகேஷ் படம், LCU என எக்கச்சக்கமான காரணங்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதுவரை தளபதி விஜய்யின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிட படக்குழு அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

முன்னதாக கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரங்களான ஆண்டனி தாஸ் , ஹெரால்டு தாஸ் சகோதரர்களுடன் மற்றொரு சகோதரராக லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது .

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.எனவே இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், லியோ திரைப்படத்திற்காக தளபதி விஜய் பங்கேற்கும் ஒரு ஸ்பெஷல் பேட்டி அல்லது வேறு ஏதாவது ஸ்பெஷல் விஷயங்கள் செய்யப்படுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு எல்லோரும் காத்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இதனை அறிவிக்கும் வகையில் கழுதைப்புலியுடன் தளபதி விஜய் சண்டையிடும் மாஸான சண்டைக் காட்சியை கொண்ட புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதிரடியான அந்த போஸ்டர் இதோ...
 

Your order is being prepared 😎#LeoTrailer is on its way! Get ready to enjoy your meal 🔥

Unga delivery partner @7screenstudio will deliver them on October 5th 😉#LeoTrailerFromOct5#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjaypic.twitter.com/xgHzueGWpJ

— Seven Screen Studio (@7screenstudio) October 2, 2023