சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.

தற்போது பேட்ட ட்ரைலர்  28-ம் தேதி வெளிவரவிருக்கிறது. பாடல் மற்றும் டீஸர் கொண்டாட்டத்தை தொடர்ந்து ட்ரைலருக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.