சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட படத்தின் ட்ரைலர் 2019 புத்தாண்டு அன்று மாலை வரும் என்று பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தின் ஓட்ட நேரம் அதாவது ரன் டைம் 2 மணி நேரம் 51 நிமிடங்கள் என்ற செய்தி தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் வன்முறை தொடர்பான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பேட்ட படம் ஜனவரி 11-ம் தேதி திரைக்கு வெளிவரவிருக்கிறது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. இச்செய்தி அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த கொண்டாடத்தில் உள்ளனர். பேட்ட படத்தின் ஓவர்சீஸ் விநியோகிஸ்தர்கள் மூலம் இச்செய்தி தெரியவந்ததாக கூறப்படுகிறது.