தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

தினமும் படப்பிடிப்பு என பிஸியாக இருந்த யோகிபாபு, சென்ற லாக்டவுனில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்தார். லாக்டவுனில் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வந்தார் யோகிபாபு. சில நாட்கள் முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்திருந்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இதற்கு முன்னதாக வடிவேல் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களுக்காக இந்த படத்தின் ஹீரோவாக யோகிபாபு ஒப்பந்தமானார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் ஏலப்பன் இந்த படத்தை தயாரிக்கிறார். 

ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். ப்ரீத்தம் எடிட்டிங் செய்கிறார். ராஜகோபால் வசனம் எழுதுகிறார். படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது. உடல் முழுக்க மாஸ்க் அணிந்தபடி உள்ளார் யோகிபாபு. போஸ்டறில் மாஸ் ஹீரோ என்று எழுதி, மாஸ்க் ஹீரோ என்று திருத்தப்பட்டு இருந்தது. 

படத்தின் முதல் பாடல் ஹே என்ன வச்சு பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி பாடிய இந்த பாடல் வரிகளை சக்தி சிதம்பரம் எழுதிஇருந்தார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். ஹாரர் கலந்த காமெடி காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. பேட்ட, ஜோக்கர், பாம்பே போன்ற படங்களின் spoof காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

யோகிபாபு நடித்துள்ள ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

யோகிபாபு கைவசம் ட்ரிப் திரைப்படம் உள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு. 

இதுதவிர்த்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் ஒட்டுமொத்தமாக முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது.