தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திர நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக  வருகிறார் நடிகர் சதீஷ். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாத்த மற்றும் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் ஆகிய திரைப்படங்களில் சதீஷ் நடித்திருந்தார்.

இதனையடுத்து கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சதீஷ், நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாய் சேகர் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் நாய் சேகர் திரைப்படத்தை பிரபல நடிகரான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

மேலும் அனிருத் இசையில் உருவாகும் நாய் சேகர் படத்தின் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பவித்ர லட்சுமி நாய் சேகர் படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
pavithra lakshmi wraps her shoot for naai sekar sathish