தல அஜித் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.தல அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

Party Actor Chandramouli Tweets Venkat Prabhu Will make Official Announcement on Mankatha 2 Soon

வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் தல அஜித்துடன் விரைவில் ஒரு படம் பண்ண போவதாக தெரிவித்தார்.இதையடுத்து சில நாட்களுக்கு முன் தல அஜித்தும் வெங்கட் பிரபுவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.இதையடுத்து ரசிகர்கள் மங்காத்தா 2 வேண்டும் என்று ட்ரண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

Party Actor Chandramouli Tweets Venkat Prabhu Will make Official Announcement on Mankatha 2 Soon

இதையடுத்து கயல்,பார்ட்டி படங்களின் நாயகன் சந்திரமௌலி மங்காத்தா 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் அதையும் இயக்குனர் வெங்கட் பிரபுவே அறிவிப்பார் என்று பதிவிட்டிருந்தார்.தற்போது மாநாடு பட வேளைகளில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு அதனை முடித்த பின் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Party Actor Chandramouli Tweets Venkat Prabhu Will make Official Announcement on Mankatha 2 Soon

இந்த அறிவிப்பு மங்காத்தா 2 ஆக இருக்குமா இல்லை ஒரு புதிய படமாக இருக்குமா என தல ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு இருக்கின்றனர்.