திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு பணிகளை துவங்க முடியாமல் படக்குழு தவித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

கடந்த ஆண்டு தல அஜித்திற்கு அம்சமான ஆண்டு என்றே கூறலாம். ஒரே ஆண்டில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு வெற்றி படங்களை தந்துள்ளார். விஸ்வாசம் படத்தில் மாஸாகவும், நேர்கொண்ட பார்வை படத்தில் கிளாஸாகவும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 

இந்நிலையில் தல அஜித் பற்றி நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார். பிரபல நாளிதழின் பேட்டியில் பேசியவர், அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில், நிச்சயமாக நடிப்பேன். ஆனால், என்னை காட்டிலும், அவருக்கு வில்லனாக நடிக்க சிறப்பான நடிகர் ஒருவர் இருக்கிறார், அது அவர் தான் என பார்த்திபன் அவருக்கே உண்டான ஒரு மாடுலேஷனில் கூறியிருக்கிறார். 

ஜோக்கர் போன்ற மிரட்டலான வில்லன் ரோலில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஜோக்வின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வருவது போல் அஜித் நடிச்சார்னா பிண்ணி பெடல் எடுத்துடுவாரு...தியேட்டர் பட்டைய கிளப்பும் என பேசியுள்ளார். 

இதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தல அஜித்துடன் இணைந்து நீ வருவாய் என, உன்னை கொடு என்னை தருவேன் ஆகிய இரண்டு படங்களில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்தவையே. இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் அசத்தி வரும் பார்த்திபன், துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ளார். 

அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் அவர் குறித்த செய்திகள் வைரலாவது வழக்கமாக உள்ளது. விஸ்வாசம் திரைப்படம் 1.61 கோடி பார்வையாளர்களை பெற்று கடந்த வாராதில் முதலிடம் பிடித்துள்ளது.மேலும் இதுவரை இந்த லாக்டவுன் நேரத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் விஸ்வாசம் திரைப்படம் படைத்துள்ளது.