ரசிகர்களின் இதயத்து அதிபதியாய் விளங்கும் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் நேற்று காலை துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர், அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தளபதி 63 பற்றி நடிகர் கதிர் ட்வீட் செய்திருக்கிறார்.

Pariyerum Perumal Fame Kadhir Tweet About Thalapathy 63 In Twitter

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பின்னர் பிஸியாக இருக்கும் கதிர், தற்போது சிறந்த கதைகளை கேட்டு வருகிறார். தளபதி மற்றும் அட்லீயை மேஜிக்கல் மாஸ் காம்போ என்று கூறி, மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார் என்பதையும் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.