வேலையை விட்டு நிற்க திட்டமிடும் மீனா...!
By Aravind Selvam | Galatta | May 15, 2020 17:08 PM IST
சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.மீனா எப்படியாவது வேலைக்கு போவதில் இருந்து தப்பித்து வீட்டிலேயே இருக்க ஜீவாவிடம் பேச்சுக்கொடுக்கிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
அத சொல்லு 😃😃 #PandianStores Marathon - இன்னிக்கி சாயங்காலம் 4 மணிக்கி நம்ம விஜய் டிவில.. #QuarantineTimes #VijayTelevision pic.twitter.com/f147PFzBQl
— Vijay Television (@vijaytelevision) May 15, 2020