சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

Ponmagal Vandhal Releasing On May 29 In Prime

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Ponmagal Vandhal Releasing On May 29 In Prime

இந்நிலையில் மே 29-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது என்ற செய்தி வெளியானது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், படங்களை ஓ.டி.டி எனப்படும் டிஜிட்டல் ரிலீஸாகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ஜோதிகா ரசிகர்கள்.