இயக்குனர் ஷங்கரிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஷங்கரின் ஐ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஜிவி பிரகாஷ் வைத்து 4ஜி படத்தை இயக்கினார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருந்தது. 

4G Movie Director Arun Prasath Passed Away

இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4G Movie Director Arun Prasath Passed Away

இயக்குனர் அருண் பிரசாத்தின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா கொடூரம் ஒருபுறம் இருக்க, அடுத்தடுத்து நிகழும் திரைப்பிரபலங்களின் மறைவு சோகத்தை தருகிறது. அருண் பிரசாத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை சார்ந்த நண்பகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது கலாட்டா.