சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் குமரன் டான்ஸில் மிகவும் ஆர்வமுடையவர்விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் கலந்துகொண்டு தனது நடன திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.அவ்வப்போது தனது நடன திறமைகளை ஒரு விடீயோவாக பதிவிட்டு ரசிகர்களுக்காக வெளியிடுவார்.நடனத்தில் பிண்ணி பெடலெடுக்கும் இவரது வீடியோக்கள் டிக்டாக்கிலும் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.சமீபத்தில் இவரது மனைவியுடனும் இணைந்து இவர் டிக்டாக் வீடியோக்கள் செய்து அசத்தியுள்ளார்.யூடியூப்பிலும் வாட் நெக்ஸ்ட் என்ற தனது சேனலின் மூலம் ரசிகர்களுடன் வீடியோக்களை பகிர்ந்துவந்தார் குமரன்.பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடீயோவை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் குமரன்.விஜய்,தனுஷ் போன்ற நடிகர்களின் பாடல்களுக்கு அசால்ட்டாக ஆடி அனைவரது கைததட்டல்களையும் பெற்றுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்