ரசிகர்களை அலர்ட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் !
By Aravind Selvam | Galatta | June 03, 2021 17:14 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர்.இந்த தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் காவியா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
வெகு விரைவில் சீரியல் கனவுக்கன்னியாக காவியா உருவெடுத்தார்.அடுத்ததாக விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார் காவியா.மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்து செம ஹிட்டான இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
Axess Film Factory தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளார்,இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து காவியா அறிவுமணி நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் காவ்யா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் ஷேர் செய்து அசத்துவார்.கேரளாவில் மிகவும் பிரபலமான ஆப்களில் ஒன்று Clubhouse இந்த ஆப் தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமாகி வருகிறது.இதில் பலரும் இணைந்து பேசலாம் இதில் பிரபலங்கள் பேரில் பலர் போலி அக்கவுண்ட்களை கிரியேட் செய்து வருகின்றனர்.காவியாவின் பெயரிலும் போலி அக்கவுண்ட் தொடங்கியுள்ளனர் இது குறித்து ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார் காவியா.
Pandian Stores fame actress Kaavya makes an important clarification!
03/06/2021 05:29 PM
The much awaited announcement on Silambarasan TR's Maanaadu - Check out!
03/06/2021 05:00 PM
Interesting update on Sivakarthikeyan's Don - latest trending video here!
03/06/2021 04:33 PM