சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை மூலக்கதையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ்,சரவனவிக்ரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமலேயே இருந்து வருகிறது.

லாக்டவுனுக்கு பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களின் என்ட்ரி என்று இந்த தொடர் செம விறுவிறுப்பாக சென்று வருகிறது.இரண்டு முறை 3 மணி நேர சிறப்பு தொடர்களாக இந்த தொடர் ஒளிபரப்பட்டு அந்த சிறப்பு தொகுப்பும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

தற்போது இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் சுஜிதா,ரசிகர்களுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை சுற்றி காட்டி அதனை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.தொடரில் உடன் நடித்து வரும் குமரன்,சித்ரா ஆகியோருடன் இடையில் இவர் அடிக்கும் அரட்டைகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.