சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளியினும்,நடிகையுமான சித்ரா சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார்.இவருக்கு ஏராளமான இருந்து வந்தனர்.

இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயம் முடிந்து ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.போலீஸ் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதில் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக வேறு யாரையும் மாற்றவேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.புதிய முல்லையாக நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

சித்ரா இறந்த சோகத்தில் பலரும் சித்ரா குறித்த போட்டோக்கள்,வீடீயோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகின்றனர்.தற்போது சித்ரா பிரபல மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.தளபதி விஜய் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவரை தனது திருமணத்திற்கு தான் அழைக்க வேண்டும் என்று இதுவரை அவரை சந்திக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால் தற்போது சித்ராவின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.

A post shared by Iconstarsofficial (@iconstarsofficial)