சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores Chitra Celebrates Her Fan Birthday

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores Chitra Celebrates Her Fan Birthday

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது.அவ்வப்போது தனது ரசிகர்களை நேரில் சந்தித்தும்,அவர்களுடன் உரையாடியும் வந்தார் சித்ரா.தனது ரசிகையின் பிறந்தநாளை செம ரகளையாக அவருடன் இணைந்து அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த போட்டோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகையின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய சித்ராவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.