கவுதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒரு வெப்சீரிஸின் 4 பகுதிகளை தனித்தனியே இயக்க உள்ளனர். இதில் விக்னேஷ் சிவன் இயக்கிய பகுதியில் கல்கி கோச்சலின் மற்றும் அஞ்சலி நடித்தனர். தமிழில் உருவாகும் இந்த வெப்சீரிஸ் இன்றைய இளைஞர்களை கவரும் விதமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

Anjali Completes Dubbing VigneshShivans Webseries

இந்நிலையில், இந்த வெப்சீரிஸுக்காக தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் நடிகை அஞ்சலி. இதை வீடியோ பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அசால்ட்டாக சிங்கிள் டேக்கில் ஒகே செய்து விட்டார் அஞ்சலி. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அரசு அனுமதியோடும் பாதுகாப்புடனும் சில படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

Anjali Completes Dubbing VigneshShivans Webseries

இந்த வெப்சீரிஸ் ரிலீஸுக்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி விடுவார் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி நடிக்கும் அந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.