தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தளபதி விஜயின் நிழலாக விளங்குபவர் தான் ஜகதீஷ். சினிமா காதலால், சினிமாவையே முழுநேர தொழிலாக கொண்டவர்களுள் ஜகதீஷும் ஒருவர்.

Vijays Team Clarifies Rumours Fight With Jagdish

செலிபிரிட்டி மேனேஜராக திரை வட்டாரத்தில் கால் பதித்து, இன்று தயாரிப்பாளராக உயர்ந்து தலை நிமிர்ந்து நிற்கிறார் ஜக்தீஷ். XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் லைன் ப்ரொடுயூசராக பணியாற்றியுள்ளார். தளபதியின் வெற்றிகரமான திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஜகதீஷிற்கும் பங்குள்ளது.

Vijays Team Clarifies Rumours Fight With Jagdish

இந்நிலையில் ஜக்தீஷ் இனி தளபதியின் படங்களில் வேலை பார்க்க மாட்டார் என்றும், படைப்பு வேறுபாடு ஏற்பட்டுள்ளது என வாய்க்கு வந்தபடி சிலர் இணையத்தில் கொளுத்தி போட இச்செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. உடனே இதுகுறித்து தளபதி விஜய் தரப்பினரிடம் கேட்கையில், ஐந்து நிமிடம் சிரித்தபடி அதுபோன்ற செய்திகள் ஏதும் இல்லை. இப்படி கூடவா கிளப்பி விடுவார்கள்.... என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

லாக்டவுன் சமயத்தில் வேலையின்றி வெட்டியாக இருப்பதால் இதுபோல் வதந்தியை கிளப்புவோர்களுக்கு தளபதி ஸ்டைலில் தான் பதிலளிக்க வேண்டும். டிஸைன் டிசைன்னா….வதந்திகள் வில் கம்.. கொஞ்சம் சில் பண்ணு மாப்பி.