சன் டிவி சீரியலில் ஹீரோவான விஜய் டிவி நடிகர் !
By Aravind Selvam | Galatta | June 07, 2021 20:26 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.
அருண்,ராதிகா ப்ரீத்தி,ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன் ஜோவிதா சில காரணங்கள் எதிர்பாராத விதமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவர் விலகியபிறகும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழு பார்த்துக்கொண்டனர்.
ஜோவிதா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தை அப்படியே கதையில் இருந்து ஓரங்கட்டி விட்டு கதையை தொடர்ந்தனர்.சில நாட்களுக்கு முன் தொடரின் நாயகனாக நடித்து வரும் அருண் சில காரணங்களால் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவரது இந்த திடீர் முடிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
வம்சம் தொடரில் நடித்த ஸ்ரீனிஷ் அரவிந்த் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.இவர் புதுவராவாக தான் இணைகிறார் என்றும், ஹீரோ அருணுக்கு பதிலாக புது ஹீரோவாக பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் தொடர்களில் நடித்து பிரபலமான அஸீம் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.தற்போது இந்த தொடரில் நடிப்பதை உறுதி செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் அஸீம்.
This much loved actress gets married in a private ceremony - pictures go viral!
07/06/2021 04:00 PM
Bhumika in the next season of Bigg Boss? - Check what she has to say!
07/06/2021 03:19 PM