தமிழ் திரையுலகில் சிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவர் பா.விஜய். பாடல் எழுதுவது அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் தர்பார் படத்தில் பணிபுரிகிறார் என்ற செய்தி இன்று காலை இணையத்தில் வேகமாக பரவியது.

PaaVijay Is All Set To Start Strawberry Sequel And To Pen Lyrics

இதுகுறித்து கவிஞர் பா.விஜய் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது, பேச்சு வார்த்தையில் உள்ளது, முடிவானவுடன் அறிவிக்கிறேன் என்றார். மேலும் அவர் ப்ராஜெக்ட்ஸ் குறித்து கேட்கையில், ஸ்ட்ராபெர்ரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்றார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த படம் அருமையான வரவேற்பை பெற்றது.

PaaVijay Is All Set To Start Strawberry Sequel And To Pen Lyrics PaaVijay Is All Set To Start Strawberry Sequel And To Pen Lyrics

பா.விஜய் கைவசம் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை, SK நடிக்கும் ஹீரோ, விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன், குருதி ஆட்டம், சிந்துபாத் போன்ற படங்கள் உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா உடனும் பணிபுரியவிருக்கிறார்.

PaaVijay Is All Set To Start Strawberry Sequel And To Pen Lyrics