ஓவியாவின் 90ML படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி இண்டர்நெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.இளைஞர்களின் பேவரைட்டு ஆன இந்த 90ML ட்ரைலர் யூடியூப்பில் வெளியான சில மணி நேரத்தில் வைரல் ஹிட் ஆனது.

அனிதா உதீப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். STR இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இவரது இசையில் ஓவியாவின் குரலில் வெளியான மரண மட்ட பாடல் instant ஹிட் ஆனது.

அடல்ட் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.வரும் 22ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.சென்சார் வேலைகள் முடிந்து இந்த படத்திற்கு A சான்றிதழும் கிடைத்துள்ளது.

இளைஞர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் படம் வெளியாகும் அன்று முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்றும் படத்தின் நாயகி ஓவியா பதிவிட்டுள்ளார்.