ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்திலும் நடித்திருந்தார். 

தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள ரிச்சா தெலுங்கில் 6 படங்களிலும், பெங்காளி மொழியில் 1 படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “ஜோ என்பவரை பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். அவருடன் பழகிய இந்த இரண்டு வருடங்கள் அற்புதமானவை. எங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் புரட்சி தளபதி விஷால் திருமணம் குறித்து வந்த செய்தியும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.