ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி , ஒரு கதை சொல்லட்டுமா படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.

Oru Kadhai Sollatuma Movie Trailer Released By ARRahman Featuring Resul Pookutty As Hero

இப்படத்தை பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார், ராஜீவ் பனகல் அவர்களின் பாம்ஸ்டோன் மல்டிமீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 

Oru Kadhai Sollatuma Movie Trailer Released By ARRahman Featuring Resul Pookutty As Hero

தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை, திருச்சூரில் நடந்த ஒரு வார பூரம் திருவிழா பற்றிய தொகுப்பாகும். பார்வையாளர்களுக்காக இப்படம் இசை மற்றும் சிறப்பு சத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

Oru Kadhai Sollatuma Movie Trailer Released By ARRahman Featuring Resul Pookutty As Hero

கேரள பாரம்பரிய செண்டை மேளம் மற்றும் யானைகளின் இசை உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Oru Kadhai Sollatuma Movie Trailer Released By ARRahman Featuring Resul Pookutty As Hero

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. சவுண்ட் தொழில்நுட்பத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலரை இசைப்புயல் AR ரஹ்மான் வெளியிட்டார். இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.